ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருணாச்சலம் வரவேற்றாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 102 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது: ஏழைகள் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் கட்ட பணி ஆணைகள் பெற்ற பயனாளிகள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து குடியேற வேண்டும். மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 10 சதவீதம் கட்டணக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
உலகக்கோப்பை பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய பரூக் இன்ஜினியர் யோசனை