திருவண்ணாமலையில், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், உழவர்களைப் பாதிக்கக்கூடிய களப்பணியாளர் இணைப்பைக் கைவிடக் கோரியும், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யுஏடிடி2.0-ஐ கைவிடக் கோரியும் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பா. லோகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.