இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் விருப்ப நிதியில் இருந்து ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பத்தாம் வகுப்பு சிறப்பு வினா-விடை தொகுப்பு வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தக் கையேடுகளைப் பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆட்சியர் க. தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடிஅண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஆசிரியர்களிடம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து, சோ. கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் இயங்கும் காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை ஆட்சியர் க. தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.