தி.மலை: ஆசிரியர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அகில இந்திய பள்ளி முதல்வர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் சாலை, ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி கலந்து கொண்டு வேலைவாய்ப்பிற்க்கான ஆணையை வழங்கினார். இதில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் PTA மாநில செயலாளர் சண்முகம் சாமுவேல், தமிழ்நாடு அகில இந்திய பள்ளி முதல்வர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ஜீனா பெட்ஸி, ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் ராமச்சந்திரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி