அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பை, சீருடை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். அரசு பள்ளியில் படிக் கும் மாணவர்களுக்கு முதல்வர் மு. க ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராம பகுதியிலுள்ள மாணவர்களிடம் இரட்டிப்பான திறமைகள் உள்ளன. இதனை முழு மையாக மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டும் கல்வி விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைக்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் சரண்யா, ஒன்றிய திமுக செயலாளர் அண்ணா மலை ராமஜெயம், முன் னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.