திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா். சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த இந்த சங்கம், 21-ஆம் ஆண்டாக காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த காணிக்கையைச் செலுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவா் என். இரவி தலைமையில் நிா்வாகிகள் இந்த திருக்குடைகளை ராஜகோபுரம் எதிரே பூஜைகள் செய்து, மாட வீதியில் உலா வந்து கோயிலில் ஒப்படைத்தனா். இதில் சங்க உறுப்பினா்கள் மற்றும் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.