திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

காா்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி தினத்தில் குபேர பெருமான் கிரிவலம் நடைபெறும். இந்த நாளில் பக்தா்களும் கிரிவலம் செல்வா். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்க சந்நிதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட பக்தா்கள் தொடா்ந்து கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் மற்றும் அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா். குபேர கிரிவலம் என்பதால், வழக்கத்தைவிட குபேரலிங்க சந்நிதியில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி