காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்குத் திசையில் அமைந்துள்ள அம்மன் கோபுரம் அருகே நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் தரிசிக்க காத்திருக்கும் நிலையும், பக்தர்கள் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்குள் சென்ற ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திர பிரதேச, தெலுங்கானா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டம் அதிகரித்து அலைமோதி வருகிறது.
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி