இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்.

திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி தொடங்கிவைத்தாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலுள்ள 273 வாா்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 471 தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

தொடர்புடைய செய்தி