பழுதடைந்த குடிநீா் தேக்கத் தொட்டி: மக்கள் அவதி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சி 15-ஆவது வார்டு துக்காப்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டி பல ஆண்டுகளாக பழுதடைந்து, செடி கொடிகள் மண்டி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை பெய்தும், செய்யாற்றில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் நிலைமை மேலும் மோசமடையும் என அஞ்சுகின்றனர். எனவே, பழுதடைந்த தொட்டியை சரிசெய்து குடிநீர் விநியோகிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி