இதில் வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், புதுவை, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். கிரிவலப் பாதையிலுள்ள நிருதி லிங்கம் சன்னதி அருகில் இருந்து தொடங்கி குபேர லிங்கம் சன்னதி வரை பரத நாட்டியக் கலைஞர்கள் தனித்தனி குழுக்களாக நாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றனர். நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அரசுக் கல்லூரி சந்தை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரதக் கலைஞர்களுக்கு முத்து கண்ணம்மாள் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை வழங்கினாா்.
ஆட்டோகளுக்கான LPG தட்டுப்பாடு - ஓட்டுநர்கள் வேதனை