திருவண்ணாமலை: சூறாவளிக் காற்றால் பயிர்கள் கடும் சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய அதிக வெப்பத்தைத் தொடர்ந்து, மே 5 அன்று திடீரென மழை மற்றும் சூறாவளி காற்று வீசியது. இதனால் படவேடு, புஷ்பகிரி பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரத்தில் நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த இயற்கை சீற்றத்தால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி