திருவண்ணாமலை: வெளிநாட்டவர்களை தங்க வைப்போர் C-FORM பதிவு கட்டாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 2,000 வெளிநாட்டினர் ஆன்மிகப் பயணமாக வருகின்றனர். அவர்களை வீடு, விடுதி, ஆசிரமங்களில் தங்க வைப்போர், 24 மணி நேரத்திற்குள் C-FORM பதிவு செய்ய வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது. பதிவு செய்யாமல் தங்க இடமளித்தால், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025-ன் படி 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனுமதி மற்றும் பயனாளர் அடையாள எண்ணை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி