பின்னர் காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் சாலையில் காரில் செல்ல மட்டும் அனுமதி என்றும், தொண்டர்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்தியதில் தவெகவினர் அமைதியாக கலைந்து சென்றனர். இருப்பினும், தவெகவினர் மறுபடியும் கூட்டமாகச் சென்றதால் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை