அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெண் ஊழியா் மீது தாக்குதல்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை கோயிலின் நான்காம் பிரகாரத்தில் உள்ள சிறிய நந்தி அருகில் உள்ள தரிசன வரிசையில் 2 பேர் குறுக்கே நுழைய முயன்றனராம். இதை கவனித்த கோயில் ஊழியர் தமிழ்பிரியா, இருவரையும் தடுத்து நிறுத்தினாராம். 

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து தமிழ்பிரியாவை தாக்கினராம். இதில் காயமடைந்த தமிழ்பிரியா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, தமிழ்பிரியா கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை நகர போலீசார் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணகிரி மகன் கணேஷ் (34), ராஜாமணி மனைவி ராஜலட்சுமி (52) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி