ஆரணி: ரூ.9 லட்சத்தில் புதிய மின்மாற்றி

ஆரணி அருகே இரும்பேடு பிரிவில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி வியாழக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. செயற்பொறியாளர் பத்மநாபன் இதைத் துவக்கி வைத்தார். இந்த புதிய மின்மாற்றி மூலம் 36 வீடுகள், 9 விவசாய மின் இணைப்புகள், 7 வணிகப் பயன்பாட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மாலதி, இளநிலைப் பொறியாளர் ரவீந்திரன், விவசாய சங்கத் தலைவர் சிவானந்தம், சிறு குறு வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி