திருவண்ணாமலை அரசு ஐ. டி. ஐ. களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூர், செய்யாறு, செங்கம் ஐ.டி.ஐ.களில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி