திருவண்ணாமலை மாவட்ட புத்தகத் திருவிழா -2025 திடலில் தென்பெண்ணை இலக்கிய சமவெளி ஒருங்கிணைத்து நடத்திய இங்கிருந்து தொடங்கலாம் எனும் தலைப்பின் மூலம் 1000-ம் வாசிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு மற்றும் திரைப்பட கலைஞரும் சொற்ப்பொழிவாளருமான நடிகர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி வாசிப்பாளர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில்,தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி. , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.