திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க, சுகாதார துறையை கேட்டுக் கொண்டுள்ளோம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.