10ம் வகுப்பு தேர்வு முடிவு: தி. மலை மாவட்டம் பின்னடைவு

தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இதில், திருவண்ணாமலை மாவட்டம் 90.46 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 34வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 30,265 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 27,377 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 93.10 சதவீதத்துடன் 28வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை, இந்தாண்டு 34வது இடத்திற்கு பின்னடைந்துள்ளது. கல்வித் தரத்தை உயர்த்த கூடுதல் கவனம் தேவை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி