வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 45; இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் (செப் 27) இரவு வீட்டில் துங்கினார். நேற்று (செப் 28) அதிகாலை 5: 00 மணியளவில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை, கொலுசு, உட்பட 350 கிராம் வெள்ளி நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவு நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி