தி.மலை: உலக புகையிலை ஒழிப்பு தின கருத்தரங்கம்

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின கருத்தரங்கம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் க. பூபாலன் முன்னிலை வகித்தார். கலைஞர் முத்தமிழ் சங்க செயலாளர் முகமது ஜியா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா. இந்திர ராஜன் பங்கேற்று, புகையிலை பயன்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என புள்ளி விவரங்கள் மூலம் வலியுறுத்தினார். மேலும் இன்றை சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதைப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் சமூக ஆர்வலர் ராசாத்தி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி