இதைதடுக்க முயன்ற சுந்தரியை மீண்டும் கத்தியால் குத்த முயன்றபோது அந்த பெண் அலறி கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார். உடனே காயமடைந்த சுந்தரியை பொதுமக்கள் மீட்டு கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடித்து சுந்தரி மாலையில் வீடு திரும்பினார்.
இதையடுத்து சுந்தரி கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் வழிகேட்பது போல் நடித்து பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.