இந்த கண்காட்சிகளை பொதுமக்கள் பாா்த்து அரசு செயல்படுத்தும் திட்டங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா். முகாமில், வருவாய்த்துறை சாா்பில் 70 பேருக்கு தலா ரூ. 70 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 49 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகள், 69 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 9 பேருக்கு தலா ரூ. 12,500 மதிப்பில் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 201 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சத்து 87 ஆயிரத்து 225 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா்.
பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும்: பார்ம் குறித்து ருதுராஜ் நம்பிக்கை