மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா. மணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 52 ஊராட்சி செயலா்களுடன் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஊராட்சி செயலா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகளுக்கு முகமை திட்ட இயக்குநா் இரா. மணி உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) பிரதீப் பாபு, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.