இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் துண்டிக்கப்பட்ட மின் கம்பியை துண்டித்த மின்வாரிய அலுவலர்கள் மின் விநியோகத்தை துண்டிக்காததால், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது எனக் குற்றஞ்சாட்டி, திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள மல்லவாடி மின்வாரிய அலுவலகம் எதிரே விநாயகமூர்த்தியின் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விநாயகமூர்த்தியின் இறப்புக்கு மின்வாரிய அலுவலர்களின் அஜாக்கிரதையே காரணம் எனவும், தொடர்புடைய மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த விநாயகமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரியத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.