இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை பெ. ரேவதி தலைமை தாங்கினார். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித ஆசிரியர் இரா. கோவிந்தராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க அமைப்பு செயலாளர் த. முருகவேல் பங்கேற்று, 'அன்றாட வாழ்வில் கணிதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கணிதம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக திகழ்கிறது என விளக்கினார். மேலும் பல்வேறு கணிதப் புதிர்கள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியை சாந்தி வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.