திருவண்ணாமலை: கும்பாபிஷேக விழா; எம்எல்ஏ சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலூர் ஊராட்சியில் நடைபெற்ற விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலசப்பாக்க சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 

உடன் கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் புதுப்பாளையம் ஒன்றியம், முடியனுர் ஊராட்சியில் செய்யாறு குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் சுந்தரபாண்டியன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மனோகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி