கலசப்பாக்கம்: நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கடலாடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி. சரவணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர செயலாளர் சௌந்தர், மாவட்ட பிரதி முருகையன், திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி