திருவண்ணாமலை: பயணிகள் நிழற்குடை திறப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியில் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் 2024-25 தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிறைவு பயணிகள் நிழற்குடையினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அம்பேத்குமார் (வந்தவாசி), ஒ. ஜோதி (செய்யார்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி