திருவண்ணாமலை மாநகராட்சி, காந்தி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ஒருங்கிணைந்த தினசரி சந்தை கட்டும் பணி நடைபெறுவதை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.