கலசப்பாக்கம்: புகையிலை பொருள்கள் பறிமுதல்-10 போ் கைது

கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி கூட்டுச் சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 20) பறிமுதல் செய்தனர். இதில், 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி கூட்டுச்சாலை பகுதியில் போளூர்-செங்கம் சாலையில் கலசப்பாக்கம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போளூரிலிருந்து செங்கம் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, அவற்றை கடத்தி வந்ததாக பெங்களூர் சாஜாஜி நகரை சேர்ந்த சையத்வாசிம் (35), களம்பூர் விஜி (26), ஆரணி கண்ணன் (42), எர்ணாமங்கலம் பிரசாந்த் (21), கலசப்பாக்கம் சின்னதுரை (44), சோழவரம் தாமோதரன் (28), மோட்டூர் பிரபு (34), காப்பலூர் ராஜசேகர் (24), காப்பலூர் வேடியப்பன் (38), எர்ணாமங்கலம் பிரவீன்குமார் (25) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி