திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் தற்காலிக கட்டிடத்தில் புதிய காவல் நிலையம் அமைய உள்ள இடத்தினை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவக்குமார், காவல்துறை அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.