கலைஞர் முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் சிறுபான்மையினர்களின் நலன் கருதி மசூதிகள், தேவாலயங்கள் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் எ. வ. வேலு முயற்சியால் தொகுதி எம்எல்ஏ பெ. சு. தி. சரவணன் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் கலசபாக்கம் தொகுதியில் சிறுபான்மையர்களின் நலன் கருதி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
700 ஆடுகள்.. மட்டன் பிரியாணி உட்பட 10 வகையான உணவு.