சங்க நிர்வாகி வி. ஏழுமலை, ப. தேவேந்திரன், எம். முருகேசன், ஜெ. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலர் டி. ஜோதி போராட்டத்தை தொடங்கிவைத்தார். ஒன்றியச் செயலர் சி. சுந்தரமூர்த்தி, வழக்குரைஞர் எஸ். அபிராமன், மாவட்டக் குழு நிர்வாகி எம். பழனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், கலசப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வைத்த நகைகளை திருப்பித் தராமல் மோசடி செய்த சங்கச் செயலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கறவை மாட்டு பராமரிப்புக் கடன்கள் வழங்க தமிழக அரசு வெளியிட்ட உத்தரவை விவசாயிகளுக்குத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.