திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகவும், ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை மாநில அரசு முறையாக தொழிலாளர்களுக்கு வழங்குகிறதா என்று மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, உணவில் மண்ணைப் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். அக்ராபாளையம் செந்தில், மேட்டுக்குடிசை பெருமாள், மடவிளாகம் சிவா, புலவன்பாடி மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது