தி.மலை: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உபகரணங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டம், வெம்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கலந்துகொண்டு 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள விலையில்லா நோட்டுப் புத்தகங்களை சீருடை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் AD. சிட்டிபாபு, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஒன்றிய அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதிகள் VC. சிவப்பிரகாசம், வெ. பெருமாள், வெம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் சங்கர், திருப்பணமூர் கிளைக் கழக செயலாளர் ரவி, அரசு ஒப்பந்ததாரர் வெம்பாக்கம் S. கார்த்திகேயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் S.S. குமார், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உமாதேவிவேலு மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி