குறிப்பாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வருகை தந்து மலை ஏறி சென்று வழிபடுவது வழக்கம். சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் இன்றும் காட்சி தரும் பர்வத மலைக்கு மாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் மலை ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் பக்தர்களை வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலை ஏற அனுமதித்தனர். படிக்கட்டுகள் செங்குத்தான கடப்பாரை படி பாறைகள், ஆகாய படி, ஏணி படி என பல்வேறு பாதைகளை கடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட பக்தர்களின் கைகளில் மலை அடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் சக்தி கயிறு கட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது