காங்கிரஸ் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். பிரசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தேர்தல் குழு பொறுப்பாளர்கள் கிருஷ்ணதாஸ் மற்றும் இளையராஜா பங்கேற்றனர். கூட்டத்தில், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, மற்றும் இரண்டு இடங்களில் வாக்களிப்பவர்களின் பெயர்களை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆரணி, போளூர், வந்தவாசி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி