கலசப்பாக்கம் பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் ஆய்வு செய்தார். கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், குறைகளை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும், மருந்துகளின் விவரம், இருப்பு குறித்தும், அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் கற்றல், வாசித்தல் திறன் குறித்தும் திறனாய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சமைப்பதை ஆய்வு மேற்கொண்டார். பொது விநியோகக் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில் என அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம் கேட்டறிந்தார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்படும் பயனாளிகளின் வீடுகளை ஆய்வு செய்தார். மாவட்ட திட்ட இயக்குநர் மணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி