வந்தவாசி: கார் மோதி கட்டடத் தொழிலாளி பலி

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சேர்ந்த முருகன்(30) என்ற கட்டடத் தொழிலாளி, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூர் அருகே கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படும் முருகன், வழக்கம்போல வேலைக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தூசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி