திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரம் ஆரணி சட்டமன்றத் தொகுதி எஸ்.வி. நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார். உடன் ஆரணி நகரமன்றத் துணைத் தலைவர் பாரி பி. பாபு, ஒன்றியக் கழக செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியச் சார்பணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.