திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரித் தலைவா் டி. கே. பி. மணி முகாமை தொடங்கிவைத்தாா். மருத்துவக் குழுவினா் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடமிருந்து ரத்தம் பெற்றனா். முகாமில் மொத்தம் 66 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த தானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.