நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி, ஆளுநர் வழியாக ஒப்புதலுக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு தமிழக அரசு எடுத்துச் செல்லும் என நம்புகிறோம். சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுவரையறை நடைபெறுவதைத் தவிர்க்க இயலாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், மறுவரையறை செய்வது என்பது இயலாத ஒன்றாகும். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மாற்றாக ஒரு கூட்டணி உருவாகவில்லை. அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி அமைக்கும். அதிமுக இல்லாமல் பாஜக தேர்தலை சந்திக்காது. கலசப்பாக்கம் அருகே மண் கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!