அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட புத்தக ஆா்வலா்கள், தனி நபா் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோா், தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன, அரிய வகை நூல்கள் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் தங்களது பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
தகுதியானோா் இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்கலாம். அல்லது திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக அலுவலகம், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில், செங்கம் சாலை, திருவண்ணாமலை-606603 என்ற முகவரியில் நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9976265133 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.