வந்தவாசி: கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

வந்தவாசி அருகே ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த 51 வயது கூலித் தொழிலாளி ஏசுஆபேல், வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி