இதையடுத்து, சசிகலா செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தாராம்.
மேலும், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். இதனால் மனவேதனையடைந்த அவா், வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.