தமிழகத்தில் நேற்று பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதிகளில் நேற்று அதிகாலை 3: 30 மணி முதல் லேசான மழை பெய்தது. தொடர்ந்து காலை 9. 30 மணியளவில் ஒரு மணி நேரம் பலித்த மழை பெய்தது. பின்னர் திடீரென வெயில் அடித்தது. மதியம்12. 30 மணி அளவில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக சாலைக ளிலும் வயல்வெளிலும் வெள்ள நீர் பெருக்கடுத்து ஓடியது. தொடர்மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.