இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்து, திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் சார்பில் 10 நாள்கள் பயிற்சி பெற்ற 26 முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், மத்திய-மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல்பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற 2 முன்னாள் படைவீரர் மனைவிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் பேசிய ஆட்சியர் க. தர்ப்பகராஜ், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.