திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நேற்று காலை நாற்று நடச் சென்ற பெண்கள் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு எம்எல்ஏ ஒ. ஜோதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார்.